தென் கொரிய நடிகர் ஓயோங்-சு கோல்டன் குளோப்ஸ் 2022 ன் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.
திரைப்பட விருதுகளில் ஆஸ்கருக்கு நிகராகக் கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகள் இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த திரைப்படமாக பெஸ்ஃபாஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தி வெஸ்ட் சைட் ஸ்டோரி திரைப்படம் 3 விருதுகைளைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், தொலைக்காட்சி தொடரின் சிறந்த துணை நடிகருக்கான விருதை ஸ்விட் கேமில் நடித்த ஓ யோங்-சு வென்றுள்ளார். இவர் தி மார்னிங் ஷோ மற்றும் சஜசன் திரைப்படங்களில் நடித்ததற்காக முறையே பரிந்துரைக்கப்பட்ட பில்லி க்ரூடப் மற்றும் கீரன் குல்கின் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற நடிகர்களுக்கு எதிராக அவர் போட்டியிட்டார். இறுதியில் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஸ்குவிட் கேம் இணையத் தொடரில் நடித்ததற்காக ஓயோங்-சோவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அவர் நடித்த பிளேயர் 001 என்கிற கதாப்பாத்திரம் ரசிகளை பெரிதும் கவந்திருந்தது. மேலும் தென் கொரியாவிலிருந்து கோல்டன் குளோப் விருது பெறும் முதல் நடிகரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.